பண்டைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கியமான நடைமுறையாகவும், காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் பழக்கம் நாள்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது பல ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாமிர பாத்திரத்தில் இரவு முழுவதும் தண்ணீர் வைத்திருப்பதும், அதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதும் வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் நலம் மேம்பட உதவுகிறது.

ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாவது, இந்த நீர் செரிமான சக்தியை ஊக்குவித்து, நச்சுகளை வெளியேற்றுவதோடு, குடல் சுத்தமாக இருந்து மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். காப்பர் கலந்த நீர், கெட்ட கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் திறன் கொண்டது. சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் இத்தகைய நடைமுறையை, நவீன ஆய்வுகளும் ஆதரிக்கின்றன.
மேலும், காப்பர் கலந்த நீர் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய சக்தி கொண்டதாகும். ஈ.கோலி, சால்மொனெல்லா போன்ற ஹரிப்பான நுண்ணுயிரிகளை 8 முதல் 10 மணி நேரத்தில் அழிக்கக்கூடிய தன்மை தாமிரத்தில் உள்ளது என்பதே தேசிய மருத்துவ நூலக ஆய்வின் முடிவாகும். நீரிழிவு கட்டுப்பாடிலும் இதன் தாக்கம் மறைமுகமாகத் தெரிகிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதன் மூலம், சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திலும் காப்பர் முக்கிய பங்காற்றுகிறது.
இத்தகைய நன்மைகளை அடைய, தூய காப்பர் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பச்சை எச்சம் உருவாகாதபடி வாரத்தில் ஒருமுறை எலுமிச்சை மற்றும் உப்புடன் அதை சுத்தம் செய்ய வேண்டும். புளி, வினிகர் போன்ற அமிலங்களை சேர்க்காமல், தினமும் தண்ணீரை மாற்றி அருந்துவது மிகவும் பாதுகாப்பான வழிமுறை. 24 மணி நேரத்திற்கு மேல் தண்ணீரை சேமிக்க வேண்டாம் என்பதும் முக்கியம்.