கோவை: பொதுமக்கள் அச்சம்… கோவையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டு அடர்த்தியான மரத்தின் கிளைகள் அந்த குடியிருப்பு பகுதி வரை படர்ந்து வளர்ந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் செல்கின்ற மின்சார கம்பிகள் மரத்தின் கிளையை உரசி கொண்டுள்ளது. இதனால் அதிலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.