புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு பிறகு தொழில்துறை தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் முதன்முறையாக சந்திக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வளர்ந்த இந்தியாவுக்கான பயணம்: மத்திய பட்ஜெட் 2024-25” தில்லியில் உள்ள வின்ஜன் பவனில் செவ்வாய்க்கிழமை (இன்று) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பட்ஜெட்டுக்கு பிறகு முதன்முறையாக தொழில் துறையினரை நேரடியாக சந்தித்து உரையாட உள்ளார்.
இந்த மாநாட்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் தொழில் துறையின் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார், இது வேலைவாய்ப்பு, MSMEகள், விவசாயம், தொடக்கங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட வலுவான திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது.