நியூயார்க்: பிரபல மல்யுத்த வீரர் HHH தொப்பை உடன் ஆளே மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.
உலகப்புகழ் பெற்றவர் மல்யுத்த வீரர் HHH என்கிற பால் மைக்கேல். அவர் ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். Blade: Trinity, Inside Out போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
ஒருகாலத்தில் சிக்ஸ் பேக் உடன் எல்லோரையும் மிரள வைக்கும் லுக்கில் இருந்த HHH தற்போது தொப்பை உடன் ஆளே மாறி இருப்பதாக போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது.
அவர் மனைவி Stephanie McMahon (WWE உரிமையாளரின் மகள்) உடன் சமீபத்தில் கிரீஸ் நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த போட்டோக்கள் தான் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
HHH உடலுக்கு என்ன ஆனது என ரசிகர்கள் சோகத்துடன் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.