சென்னை: இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலை. நிலக்கடலையில் ¼ சதவீதம் புரதமும், ½ சதவீதம் எண்ணெயும் இருக்கிறது. இதில் வைட்டமின் ‘பி’ சத்துக்களான தயாமின் மற்றும் நயாசின் உள்ளது. சமையல் எண்ணெய் கடலையை பச்சையாகவும் வறுத்தும், வேகவைத்தும், சுட்டும் சாப்பிடலாம். உப்பு, காரம் சேர்த்தும் தயார் பண்ணலாம்.
இனிப்பாகவும் இதை சாப்பிட்டு கொள்ளவும். கடலையை அதிகமாக வறுக்கக் கூடாது. அப்படி செய்வதால் அதிலுள்ள புரதசத்து பாதிக்கப்பட்டு நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். அதோடு சுவையும் கெட்டுவிடும். வேகவைத்த கடலை மிகவும் நல்லது. கடலையில் இருந்து எடுக்கும் எண்ணெய் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
சிறுகுழந்தைகளுக்கு சத்துணவு தயாரிக்கும் போது தானியம், பருப்பு இவற்றுடன் ஒரு பங்கு நிலக்கடலையை மாவாக்கி சேர்த்தால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வறுத்த கடலையைச் சிறிது வெல்லத்தோடு சேர்த்து சாப்பிடுவதால் புரதமும், சக்தியும் கிடைக்கும்.
நிலக்கடலையை பயன்படுத்தி பலவிதமான உணவுப்பொருட்கள் தயாரிக்கலாம். அதாவது நிலக்கடலை பால், நிலக்கடலை வெண்ணெய், நிலக்கடலைபொடி புண்ணாக்கு, எண்ணெய் போன்றவையாகும். மருத்துவ குணங்கள் நிலக்கடலையில் அதிகளவு நார்ச்சத்து, அன்சேச்சுரேடட் கொழுப்பு உள்ளது.
இதனால் நிலக்கடலையை உண்பதால் இருதயநோய் மற்றும் சர்க்கரைநோய் குறைவதோடு ரத்தஅழுத்தமும் குறைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.