புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை சரியா, தவறா? என்பது குறித்து பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கருத்துக்களை கேட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமா, இல்லையா? இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா? வாக்காளர் பட்டியலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை கொண்டவர்களின் பெயர்கள் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா, இல்லையா?
வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா? இதில் பதில் ஆம் என்றால் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியின் வெற்றிக்குப் பங்களிக்க முன்வாருங்கள் என்று தெரிவித்து உள்ளது.