இஸ்லாமாபாத்: சமீபத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நடந்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து மட்டும் பேச்சுகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணையால் தாக்குவோம், நம்மிடம் அணு ஆயுதம் உள்ளது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் திமிராக எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. பல பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் அலறி போரை நிறுத்தும்படி கெஞ்சியது.

ஆனால் வாய்க்கொழுப்பை விடாமல் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை சீண்டிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்தியா மனிதாபிமானம் காட்டி வருகிறது. சமீபத்திய கனமழையால் காஷ்மீர் மற்றும் வடமாநில ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியன. சட்லஜ், ரவி, செனாப் ஆகிய ஆறுகளில் வெள்ளம் அதிகரித்தது. இவை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் வழியாக பாய்வதால் அந்நாட்டுக்கு வெள்ள அபாயம் உருவானது.
இதனை முன்னிட்டு, இந்திய அரசு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பியது. ரவி ஆற்றின் தெயின், மத்பூர் அணைகள் நிறைவடைந்ததால் தண்ணீர் திறக்கப்படும் எனவும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தியாவின் எச்சரிக்கையால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் உள்ளிட்ட பகுதிகளில் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். எதிரி நாடாக இருந்தாலும் மக்களின் உயிர் முக்கியம் என்ற மனிதநேயக் கொள்கையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதற்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தானில் மழை காரணமாக ஏற்கனவே 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதனிடையே, இந்தியாவின் எச்சரிக்கை 1.5 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றியிருக்கிறது.