விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பாட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பது குறித்து, குழந்தைகள் நல அமைப்பினர் புகார் அளித்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையே, இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தது குறித்து அறிந்தவுடன் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.