பேங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூசிஓ போன்ற தேசிய வங்கிகளில் மொத்தம் 4,465 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு
ஐபிபிஎஸ் நடத்தும் இந்தப் பணிகளுக்கான தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. முன்னதாக, முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதம் ஆன்லைனில் நடத்தப்படும். செப்டம்பரில் இதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முடிவுகள் டிசம்பர்/ஜனவரியில் அறிவிக்கப்படும். பின், நேர்காணல் நடத்தப்பட்டு, ஏப்ரலில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
தகுதியான வயது
குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அதிகபட்ச வயது வரம்பு, தளர்வு
எஸ்சி,/எஸ்டி, பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
ஓ.பி.சி., – 3 ஆண்டுகள்
குறைபாடுகள் உள்ளவர்கள் – 10 ஆண்டுகள்
தேர்வு கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175, இதர பிரிவினருக்கு ரூ.850 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
www.ibps.in என்ற இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். புகைப்படம், கையொப்பம், இடது கைரேகை, கையால் எழுதப்பட்ட சுய சான்றளிப்பு சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.
நேர்காணல்
தகுதியான விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதியில் தங்களின் அழைப்புக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேரில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்கள்
நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.