வயநாடு: “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு ராகுல் மற்றும் பிரியங்கா செய்தியாளர்களை சந்தித்தனர்.
வேதனை
அப்போது ராகுல் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர். இது பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதி மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும். அனைத்து உதவிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி அவசியம். ஏராளமானோர் வீடு மற்றும் உறவினர்களை இழந்து தவிப்பது வேதனை அளிக்கிறது.
நன்றி
மீட்புப் பணியில் அயராது ஈடுபட்டவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வயநாடு சம்பவத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. இது அரசியல் பேசும் இடம் அல்ல. நிலச்சரிவில் எனது தந்தையையும், பெற்றோரை இழந்தவர்களையும் இழந்த வேதனையை உணர்கிறேன். ராகுல் கூறினார்.
துக்கம்
அப்போது பிரியங்கா கூறியதாவது: வயநாடு மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் உதவ வேண்டும். உதவி செய்பவர்களைக் காணும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யப்படும். தங்கள் குடும்பத்தைக் காக்க முயன்று உயிர் இழந்தவர்களின் துயரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.