சேலம்: மனித நேயம் மரிக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் அமைந்துள்ளது. என்ன தெரியுங்களா?
மேட்டூர் அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் ஒரு நாய் சிக்கி கொண்டது. இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நாயால் கரைக்கு வர முடியாத நிலை. இந்த நாய்க்கு இளைஞர்கள் ட்ரோன் மூலம் உணவளித்தனர். இதை பார்த்தகவர்கள் மனித நேயம் மரிக்கவில்லை என்று பாராட்டினர்.
மேட்டூர் அணையின் 16 கண் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் அங்குள்ள மேடான பகுதியில் சிக்கிக் கொண்டு கடந்த 3 நாட்களாக உணவில்லாமல் தவித்த நாய்க்கு இளைஞர்கள் சிலர் ட்ரோன் மூலம் பிஸ்கட் மற்றும் இறைச்சித் துண்டுகளை கொடுத்தனர்.