திருச்சி: விதிகள் மீறப்பட்டதாக தவெக நிர்வாகிகள் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது விதிகள் மீறப்பட்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு எதிராக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.