சென்னை: பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தட்கல் ரயில் முன்பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் மோசடி தடுக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. தற்போது 60 நாட்களுக்கு முன்பாக சாதாரண ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை செயல்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது, முதல் 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஆதார் இணைக்கப்பட்ட பயணிகள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஆதார் இணைக்காத பயணிகள் 8:15க்கு பிறகு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதன் நோக்கம் போலி IRCTC கணக்குகள் மற்றும் சிறப்பு மென்பொருள் மூலம் முன்பதிவு மோசடிகளை கட்டுப்படுத்துவது.

மேலும், தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திண்பண்டங்களை கீழே வீசுவதால் எலி, நாய் போன்ற உயிரினங்கள் ரயில் நிலையங்களில் பிரச்சனை ஏற்படுத்துகின்றன. பயணிகள், நடைமேடை மற்றும் ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும். தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டல்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளை பயணிகள் ரயில் நிலையங்களில், தண்டவாளங்களில் வீச கூடாது.
இது தவிர, ரீல்ஸ் எடுத்தால் குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் மற்றும் கைது செய்யப்படலாம் என ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படைகள் இதற்காக தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். பயணிகள், பாதுகாப்பும் தூய்மையும் பராமரிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.