திருவனந்தபுரம்: சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நாளை மும்பையில் நடைபெறும். இதில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள், சபரிமலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்தார்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு பவள விழாவையொட்டி நாளை மும்பையில் முதல் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு மும்பையில் நாளை நடைபெறும். 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முன்பதிவு செய்திருந்தனர்.
3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். தமிழகம் சார்பாக அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள். சபரிமலை மேம்பாட்டு பணிகள், மாஸ்டர் பிளான் உள்ளிட்டவை குறித்து 3 அமர்வுகளாக விவாதங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.