கோவை: முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ப்ளூடூத் கடிகாரம் பரிசளித்து முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி வழியனுப்பி வைத்தார்.
கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் முதன் முறையாக பயணித்த கரூர் சோமூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ப்ளூட்டூத் கடிகாரம் மற்றும் இனிப்பு வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
ரவுண்ட் டேபிள் மற்றும் லேடிஸ் சர்கிள் இந்தியா அறக்கட்டளைகள் மூலம் அந்த மாணவர்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.