சென்னை: நம்மில் அனைவருக்கும் சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும். இந்த பதிவில் சுலபமான முறையில் சுவையான புதினா பெப்பர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
சிக்கன் -1 கிலோ
புதினா – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
மல்லித்தழை – 1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம் -15
மிளகு – 2 ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை -2
ஏலக்காய் -2
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2
எண்ணெய் – தே.அளவு
இஞ்சி பூண்டு விழுது –1 1/2 டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தே.அளவு
செய்முறை: சிக்கனை வேக வைத்த பின்னர் முதலில் சிக்கனுக்கு தேவையான மசாலாவை அரைத்து கொள்ளவும். மிக்ஸியில் ஒரு கைப்பிடி புதினா, மல்லித்தழை,பச்சை மிளகாய் ,சீரகம், சோம்பு மிளகு, உப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு அதில் பட்டை,கிராம்பு ஏலக்காய்,நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் குழம்பு மிளகாய் தூள், சிக்கன் மசாலா மற்றும் அரைத்து வைத்த புதினா மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும். நன்கு வதங்கியதும் சிக்கனை சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் சிக்கனை தேவையான உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்னர் கடைசியாக புதினா தழையை தூவி இறக்கி வைக்கவும். இப்போது அருமையான புதினா பெப்பர் சிக்கன் தயார்.