சென்னை: பொதுவாகவே கடல் உணவுகள் என்றாலே அதிக சத்து மிகுந்தது. அதிலும் நண்டில் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது. கண் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதில் நண்டு முக்கிய பங்காற்றுகிறது. இந்த பதிவில் மதுரை ஸ்டைல் நண்டு சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு – 1/4 கிலோ (இரண்டாக வெட்டியது)
மிளகு, சீரகம் – 1 டீஸ் ஸ்பூன்
பூண்டு பல் – 10
இஞ்சி – சிறிது
சி. வெங்காயம் – 15
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் – தே.அளவு
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தே.அளவு
செய்முறை: முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும். இப்பொழுது வெங்காயத்தை அதனுடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இப்பொழுது குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறிவிடவும்.
பச்சை வாசனை போனதும் நண்டை அதில் சேர்த்து கிளறவும். இப்பொழுது நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து அதனோடு மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறவும். பின்னர் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் உகந்த நண்டு சூப் தயார்.