தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திங்களுர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஆன நெற்பயிர்கள் இரவு பெய்த கன மழையில் நீரில் மூழ்கி மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு சுற்றி உள்ள திங்களூர், புனவாசல், ஈச்சங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கன மழையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி மிதக்கின்றன. அறுவடை நேரத்தில் பயிர்கள், நீரில் மூழ்கி இருப்பதால் முளைத்து மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகன் கவலை அடைந்துள்ளனர்.