சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதார கல்வி பாடத்திட்டத்தில் ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருந்து முறைகள் பற்றிய பாடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக என்.சி.இ.ஆர்.டி (NCERT) மற்றும் யு.ஜி.சி (UGC) இணைந்து ‘ஆயுஷ் பாட புத்தகம்’ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை வைத்தியம் போன்ற பாரம்பரிய சிகிச்சை முறைகளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இதற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து பாடத்திட்ட வடிவமைப்பில் பணிபுரிகின்றன.
அரசு, சுகாதார கட்டமைப்பை பொதுமக்களுக்கு மலிவாகவும் எளிமையாகவும் கொண்டு செல்லும் முயற்சியில் உள்ளது. இது, பாரம்பரிய மருத்துவத்தின் நம்பகத்தன்மையை உயரும் படியாகவும், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் படியாகவும் இருக்கும்.