பல்லடம்: பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
விசாரணையில் துத்தாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மற்றும் இவரது மனைவி சாந்தாள் அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது பின் தொடர்ந்து வந்த நபர் சாந்தாள் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறிய சாலையில் விழுந்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.