சென்னை: திருமண மோசடி புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
திருமண மோசடி புகார் விசாரணைக்கு முதல் மனைவி சுருதியுடன் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர் ஆனார். திருமணம் செய்து கொள்வதாக கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்த நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜாய் கிரிசில்டாவும் ஆஜர் ஆனார்.
இரண்டரை மணி நேர விசாரணைக்கு பின் முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் புறப்பட்டுச் சென்றார். மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாய் கிரிசில்டாவும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.