கோவை: நகைக்கடையில் திருட்டில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த 13ஆம் தேதி பஜார் பகுதியிலுள்ள நகைக்கடை ஒன்றின் பின்பக்க ஜன்னலை அறுத்து உள்ளே நுழைந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய லாக்கரை உடைத்துத் திருட முயன்ற நபர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாமைச் சேர்ந்த அந்த நபரால் லாக்கரை உடைக்க முடியாமல் போகவே நகைகள் தப்பின என்பதும் குறிப்பிடத்தக்கது.