தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 3 (நீளவாக்கில் வெட்டியது)
பூண்டு – 6-7
இஞ்சி – ஒரு துண்டு
பிரட் – 8-10
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகுளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து நீரில் போட்டு பிரட்டி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
அதன் பின் வெங்காயத்தை சேர்த்து, அத்துமன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும். பின் பச்சை மிளகாயை தட்டிப் போட்டு, நீர் சேர்க்காமல் கைகளால் நன்கு பிசைந்து வைக்க வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் பக்கோடா தயார்.