சென்னை: வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தில் உள்நோக்கம் உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தில் உள்நோக்கம் உள்ளது.
எங்கேயும் நடக்காத ஒரு அநீதி இந்த வீராங்கனைக்கு நடந்துள்ளது. இதை விட ஒரு கொடுமை இந்த உலகத்தில் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக, இதயங்களை நொறுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.