சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த வழிகாட்டில் நெறிமுறைகள் பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2026, பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டவுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.