தஞ்சாவூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கீழவஸ்தாசாவடி கிளை ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு வணிகர் சங்க பேரமைப்பு தஞ்சை மாநகர செயலாளர் ஜெயக்குமார் தவைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.என்.துரை, மாவட்ட செயலாளர் தியாக.சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், துணை தலைவர்தாமரை செல்வன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழவஸ்தாசாவடி கிளை தலைவர் மகாதேவன் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில், தஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸில் இருந்து பட்டுக்கோட்டை வரை அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். பட்டுக்கோட்டை பைபாஸில் அமைக்கப்பட்டிருக்கின்ற மின்விளக்குகள் சில நேரங்களில் எரிகின்றது. சில நேரங்களில் எரிவதில்லை. இதனால் மாலை, இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்து நிற்கும் பொது மக்களுக்கு திருட்டு மற்றும் வழிப்பறி அச்சுறுத்தல் அதிகமாக இருக்கின்றது. எனவே தொடர்ந்து மின் கம்பத்தில் மின்விளக்குகள் முறையாக எரிவதற்கான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
பட்டுக்கோட்டை பைபாஸிலிருந்து பட்டுக்கோட்டை-மன்னார்குடி பிரிவு சாலை வரை பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு அதிவேகமாக செல்கின்றன. இதனை தடுத்து 30 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் போகாமல் தடுப்பதற்கான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கீழவஸ்தாசாவடி கிளை செயலாளர் சரவணகுமார், பொருளாளர் மாதவன், கௌரவ தலைவர் மதிவாணன், துணைத்தலைவர்கள் இளங்கோவன், வேலவன், இணைச்செயலாளர்கள் சிவகுமார், முத்துக்குமார், துணைச்செயலாளர்கள் சுல்தான், கண்ணன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், பரிமேல்அழகர், கண்ணன், நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.