தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 5
தக்காளி – 3
சிறிய உருளைக்கிழங்கு – 1
சின்ன வெங்காயம் – 6
பச்சை மிளகாய் – 2
வரமிளகாய் – 3
புளி – சிறு துண்டு
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 2 கப்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், சிறு புளி துண்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, அவற்றை ஒரு குழி பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி தயார்.