By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உயிருடன்தான் இருக்கிறேன்… மீண்டும் வீடியோ வெளியிட்ட நெதன்யாகு
    1 Min Read
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள்… அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
    1 Min Read
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது… எதனால் தெரியுங்களா?
    1 Min Read
    காது, கழுத்து வலி பிரச்சனைகளை தீர்க்கும் சூன்ய முத்திரை
    2 Min Read
    தரையில் படுத்து உறங்குவதால் முதுகெலும்பிற்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    துக்கத்தை வெளிப்படுத்தாவிடில் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்
    2 Min Read
    சுவை நிறைந்த லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி ?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காது, கழுத்து வலி பிரச்சனைகளை தீர்க்கும் சூன்ய முத்திரை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > காது, கழுத்து வலி பிரச்சனைகளை தீர்க்கும் சூன்ய முத்திரை
தமிழகம்

காது, கழுத்து வலி பிரச்சனைகளை தீர்க்கும் சூன்ய முத்திரை

Nagaraj
Last updated: March 18, 2026 4:04 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: காது வலியால் அவதிப்படுபவர்கள் சூன்ய முத்திரையை செய்து வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். அதன் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைகளை நீக்கும் சூன்ய முத்திரை பொதுவாக நிறைய மனிதர்கள் காதுவலியினால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது.
மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும். காதுவலி பற்றி கவலைப்பட்டவர்கள் இங்கே கொடுத்துள்ள முத்திரையை அதாவது சூன்ய முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும். காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள். காதில் உள்ள நரம்புகள் பலப்படும்.

எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும்.மன அழுத்தம், டென்ஷன், படபடப்பினால் கழுத்து நரம்புகளுக்கு இரத்தம் சரியாகச் செல்லாமல் கழுத்து வலி வரும். மூளையிலிருந்து பிரியும் சிந்தனையைத் தூண்டும் நரம்புகள் அதிக சிந்தனையினால் இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாமல் பாதிக்கப்பட்டு அதனால் கழுத்துவலி வரும். இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டினால் கழுத்துவலி வரும். கம்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அதிகமான எடையை சுமந்தால் கழுத்து வலி வரும்.

தினமும் பதினைந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் பயிற்சி செய்யுங்கள். கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படும். கழுத்துவலி நீங்கும். கவலை வேண்டாம். இவ்வளவு அற்புத பலன்களைத் தரும் சூன்ய முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.

முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும்.

மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இந்நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம். இப்படி தினமும் செய்வதால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

You Might Also Like

இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது… எதனால் தெரியுங்களா?

தரையில் படுத்து உறங்குவதால் முதுகெலும்பிற்கு கிடைக்கும் நன்மைகள்

துக்கத்தை வெளிப்படுத்தாவிடில் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்

சுவை நிறைந்த லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி ?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழம் அளிக்கும் ஆரோக்கியம்

TAGGED:palpitationsProblemsquick fixSTRESStensionடென்ஷன்பிரச்னைகள்மன அழுத்தம்விரைவில் தீர்வு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஆவடி தொகுதியில் சசிகலா போட்டியிடுகிறாரா?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?