இலங்கை: ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை பேருவளைக் கடற்பரப்பில் இருந்து திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு படகில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது படகில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் கடத்தி வந்ததை பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் இலங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது_