சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.
19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. இதனிடையே தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்படும் எம்.எஸ். தோனி இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மும்பை அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 40 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 21-ல் மும்பையும், 19-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை மோதியதில் அதிலும் மும்பையின் கையே சற்று ஓங்கி (5-4) நிற்கிறது.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த சீசனில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியபோது, சென்னை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.