புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உட்பட பல நாடுகளில் ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் கமலேஷ் பரேக். இவர் எஸ்பிஐ தலைமையிலான பல வங்கிகளில் பல நூறு கோடி கடன் பெற்று, அதை முறைகேடான வழியில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் மாற்றியுள்ளார். அதன்பின் அவர் யுஏஇ தப்பிச் சென்றார்.
இவர் மீது நிதி மோசடி வழக்குப் பதிவு செய்த சிபிஐ, இவரை கைது செய்ய இன்டர்போலுக்கு ரெட் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து பரேக்கை அமீரக அதிகாரிகள் கைது செய்தனர்.
யுஏஇ உடனான குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தப்படி அவர் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று முன்தினம் டெல்லி அழைத்து வரப்பட்ட பரேக்கை, சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.