சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தளுக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. இதனால் தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் மற்றும் பாமகவிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழ் நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களை சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழு தலைவராக விஜயை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தவெக ஆட்சியமைக்கும் போது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார்