திருச்செந்தூர்: ராட்சத அலையில் சிக்கினர்… திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது பக்தர்கள் ராட்சத அலையில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் 3 பேரை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததில் மூன்று பேருக்கு காலில் காயம் அடைந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.