கரூர்: கரூர் அருகே அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக தற்காலிக கிணறு அமைத்து தண்ணீர் திருடப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் கிணறுகள் பொக்ளின் இயந்திரம் மூலம் இடித்து மூடப்பட்டது.
கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டான் கோவில் கீழ்பாகம், ஆண்டான் கோவில் மேல்பாகம் ஊராட்சி, கருப்பம் பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக வட்டக்கிணறுகள் அமைத்து தண்ணீர் திருட்டு பல வருடங்களாக நடந்து வந்ததது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் செயற் பொறியாளர் சந்தோஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி, அங்குள்ள 14 தற்காலிக வட்டக் கிணறுகளை பொக்ளின் இயந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றியதுடன், அவற்றை மணல் கொண்டு மூடினார்