புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், “விமான டர்பைன் எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதி” உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய தகவல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருவதால், விமான எரிபொருள் விலைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விமான நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் கூடுதல் சுமை ஏற்படுகிறது.
இந்த புதிய நிதி மூலம் விமான எரிபொருள் விலைகளில் நிலைத்தன்மை ஏற்படுத்தி, விமானப் போக்குவரத்துத் துறையை பாதுகாக்க முடியும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.