சென்னை: சினிமாவில் வெற்றிக்கும் தோல்விக்கும் அதிர்ஷ்டத்தை விட திறமையே முக்கியம் என்று நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிதி அகர்வால், தமிழில் ‘ஈஸ்வரன்’, ‘பூமி’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், “ராசியான நடிகை என்று அழைக்கப்படுகிறீர்களே?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நிதி அகர்வால், “புகழ்ச்சியையோ விமர்சனங்களையோ பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்” என்றார்.
“ஒரு படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து என்னை மேம்படுத்திக் கொள்வேன். அதிர்ஷ்டத்தை விட திறமையைத்தான் அதிகம் நம்புகிறேன்” என்றும் அவர் கூறினார்.