வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மொரோன் மற்றும் தலைநகர் காரகாஸ் ஆகிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன. இந்தச் சோக சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், வெனிசுலா நிலநடுக்கப் பாதிப்புகள் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் சார்பாக ஆறுதல் கூறியுள்ளார். வெனிசுலாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.