கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்குள்ள பகா கடற்கரையில் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து, தனது செல்போனில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எழும்பிய ஒரு ராட்சத அலையானது, பாறையில் இருந்த மசாலியைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது. கடல் சீற்றம் பயங்கரமாக இருந்ததால் மீட்புக்குழுவினரால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது.