பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்த விஜயம்மா (50), சைத்ரா (20), சுவேதா (38), பிரியங்கா (28) மற்றும் மகேஷ் ஆகியோர் மண்டியா மாவட்டம் முத்தத்தி வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடிந்தபின், அவர்கள் காவிரி ஆற்றங்கரையில் நின்று செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஜயம்மா ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத அவரைப் காப்பாற்ற குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக ஆற்றில் குதித்ததில் 5 பேருமே நீரில் மூழ்கினர். தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 5 பேரின் உடல்களை மீட்டனர்.