சென்னை: நான் மருத்துவ கல்லூரி தொடங்க விண்ணப்பித்துள்ளேன் என்பதை அமைச்சர் செங்கோட்டையன் நிரூபித்து விட்டால், அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அதே நேரம் என் மீது அவர் சொன்ன குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபனமானால் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலக தயாரா எனவும் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்து உள்ளார்.