கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தவெகவுக்கு தாவ பண்ருட்டி எம்எல்ஏ மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த பண்ருட்டி எம்எல்ஏ மோகனை பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது. எனவே எம்எல்ஏ பதவியை மோகன் விரைவில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.