சென்னை: சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யார் திறந்து வைப்பார்கள் என்று முன்பு எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய் தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தை திறந்து வைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு நடிகர் விஜய் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
நீண்டகால சட்டப் போராட்டங்களும், நிதி நெருக்கடிகளும் கடந்த நிலையில் தற்போது கட்டடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், கட்டடம் திறக்கப்பட்ட பிறகே தனது திருமணத்தை நடத்துவேன் என்ற முடிவில் தொடர்ந்து இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.
