சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் காரணமாக கூடுதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையிலான சில வசனங்கள் அல்லது காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அவற்றை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக சில காட்சிகளை மீண்டும் படமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அக்டோபர் 15-ந் தேதி ஆயுதபூஜை வெளியீட்டில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், விஜய் தொடர்பான காட்சிகள், ரீ-ஷூட் மற்றும் ரிலீஸ் தாமதம் குறித்து படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
