By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆஸ்திரேலிய விசாவுக்கு இந்தியர்களின் பயோமெட்ரிக் விவரங்கள்: புதிய நடைமுறை விரிவாக்கம்
    1 Min Read
    பாகிஸ்தான்–சீனா புதிய தகவல் தொடர்புத் திட்டம்: தவறான தகவல்களை எதிர்கொள்ள முயற்சி
    1 Min Read
    பிரேசில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஃபிளாவியோ போல்சனாரோவுக்கு நெருக்கடி: பாஸ்போர்ட்களை ஒப்படைக்கக் கோரிக்கை
    1 Min Read
    பிரான்சில் கலவரத்தில் ஈடுபடுவோருக்கு 10,000 யூரோ அபராதம்? அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு
    1 Min Read
    உலக வெப்பமயமாதலுக்கு மேலும் ஆபத்து: பசுமைக்குடில் வாயுக்கள் புதிய உச்சம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையக் கூட்டத்தில் 9 கட்சிகள் வெளிநடப்பு!
    2 Min Read
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எண்ணெய் உலகுக்கு புதிய அதிர்ச்சி! பாப் அல்-மாண்டெப் அருகே பதற்றம் தீவிரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > எண்ணெய் உலகுக்கு புதிய அதிர்ச்சி! பாப் அல்-மாண்டெப் அருகே பதற்றம் தீவிரம்
உலகம்

எண்ணெய் உலகுக்கு புதிய அதிர்ச்சி! பாப் அல்-மாண்டெப் அருகே பதற்றம் தீவிரம்

Nagaraj
Last updated: September 12, 2026 2:59 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ஹார்முஸ்: ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்டு ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், செங்கடல் கடல் வழித்தடத்திலும் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஏமன் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முன்னேற்றம், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களை ஹவுதி அமைப்பு தொடர்ந்து குறிவைத்து தாக்கி வரும் நிலையில், சவுதி அரேபியா எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. முக்கிய கடல்வழியான பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மோகா துறைமுகத்தை ஹவுதி அமைப்பு கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சம்

இதன் காரணமாக பாப் அல்-மாண்டெப் வழியாக நடைபெறும் சர்வதேச கடல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்காக சவுதி அரேபியா கடந்த 1980-ம் ஆண்டில் கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாய் அமைப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழாய் வழியாக கச்சா எண்ணெயை மேற்குக் கடற்கரை பகுதிகளுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது சவுதி அரேபியா.

டிரோன் தாக்குதல் குற்றச்சாட்டு

இதற்கிடையே, இந்த முக்கிய எண்ணெய்க் குழாயை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. ஈராக்கில் இருந்து டிரோன்கள் ஏவப்பட்டதாகவும் சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக முக்கிய பைப்லைனை தற்காலிகமாக மூடுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஈராக்கிலிருந்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹவுதி அமைப்பின் இந்த முன்னேற்றம், ஈரானுக்கு அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய மோதலில் புதிய மூலோபாய வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்று அரசியல் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

You Might Also Like

ஆஸ்திரேலிய விசாவுக்கு இந்தியர்களின் பயோமெட்ரிக் விவரங்கள்: புதிய நடைமுறை விரிவாக்கம்

பாகிஸ்தான்–சீனா புதிய தகவல் தொடர்புத் திட்டம்: தவறான தகவல்களை எதிர்கொள்ள முயற்சி

பிரேசில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஃபிளாவியோ போல்சனாரோவுக்கு நெருக்கடி: பாஸ்போர்ட்களை ஒப்படைக்கக் கோரிக்கை

பிரான்சில் கலவரத்தில் ஈடுபடுவோருக்கு 10,000 யூரோ அபராதம்? அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு

உலக வெப்பமயமாதலுக்கு மேலும் ஆபத்து: பசுமைக்குடில் வாயுக்கள் புதிய உச்சம்!

TAGGED:Bab el MandebhouthisIranOil CrisisRed SeaSaudi Arabiaஈரான்எண்ணெய் நெருக்கடிசவுதி அரேபியாசெங்கடல்பாப் அல் மாண்டெப்ஹவுதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்முறை

By Nagaraj 1 Min Read

அட்டகாசமான சுவையில் ராகி வெஜ் நூடுல்ஸ்!

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

அட்டகாசமான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ஈஸியா செய்யலாம்!

இன்று நாம் மாங்காய்த் துருவல் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள…

By Nagaraj
சினிமா

‘கமல் ஸ்ரீதேவி’ படத்தில் பிரபுதேவா–சிம்ரன் இணைவு! புதிய பட அறிவிப்பு கவனம்

சென்னை: பிரபுதேவா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படம் குறித்த செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.…

By Nagaraj
சினிமா

தமிழில் அறிமுகமாகும் கல்யாணி அனில்! புதிய படத்தின் மூலம் கோலிவுட்டில் பயணம்

சென்னை: கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் மூலம்…

By Nagaraj
சினிமா

யோகிபாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பரில் வெளியீடு

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு நடித்துள்ள 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர்…

By Nagaraj
சினிமா

‘கைதி 2’ எப்போது? ஏழு ஆண்டுகளை நிறைவு செய்த லோகேஷ் கனகராஜின் ‘கைதி’

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, இப்படத்தின்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?