நகோயா: ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெறும் 2 செ.மீ. வித்தியாசத்தில் தங்கப்பதக்கம் அவரிடம் இருந்து நழுவியது.
ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆன்சி சோஜன் 6.53 மீட்டர் தூரம் தாண்டி முன்னிலை பெற்றிருந்தார்.
ஆனால் சீன வீராங்கனை யிங்யிங் ஹுவாங் இறுதி வாய்ப்பில் 6.55 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதனால் 6.53 மீட்டர் தாண்டிய ஆன்சி சோஜன் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
இதே போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஷைலி சிங் 6.42 மீட்டர் தாண்டி 4-வது இடம் பிடித்தார். சீனாவின் மெங்யி டான் 6.46 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்திய தடகள அணியின் பதக்க வேட்டையில் ஆன்சி சோஜனின் வெள்ளிப் பதக்கம் முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.
