கீவ்: ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் வகையில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திக்கும் மெர்ஸ், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆளில்லா விமானங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஜெர்மனி தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் போர் தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இந்த சந்திப்பு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
