சனா: ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் அரசு ஆதரவு படைகள் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஏமன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே பல்வேறு முனைகளில் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் புதிய ராணுவ நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இதே நேரத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையிலான மக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான குழுவின் முக்கிய கூட்டம் இன்று ரியாத்தில் நடைபெறுகிறது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் எதிர்கால ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
