தமிழ்நாட்டின் தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் முடிவடைந்த நிலையில், இன்று மக்கள் அளிக்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இந்த இடைத்தேர்தல் முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் தங்களது வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
