கொச்சி: நடிகை பார்வதி திருவோத்து, தனது வெளிப்படையான கருத்துகளால் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தொடர்ந்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் பார்வதி, தனது நிலைப்பாடுகள் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாக கூறியுள்ளார். அதே நேரத்தில் ரசிகர்களின் ஆதரவே தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு மலையாள திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
