நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 48-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் சமூக அக்கறை கொண்ட கதையை வலுவாகச் சொன்ன இயக்குநர் ஞானவேல், தற்போது சூர்யாவுடன் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்றுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
படப்பிடிப்புக்காக ஜப்பானில் ஒரு வாரம் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து பாங்காக்கில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி முடித்த பிறகு, ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் விரைவில் நிறைவு செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். யோகி பாபு, பிரகாஷ் ராஜ், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
